ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தனித்துவமான சண்டைக்காட்சிகளை வடிவமைத்து புகழ்பெற்றவர் சண்டை பயிற்சி இயக்குனரான கேச்சா.. துப்பாக்கி, பில்லா-2 முதல் சமீபத்திய பாகுபலி-2 வரை ஆகிய படங்களின் ஆக்சன் காட்சிகள் இவரது கைவண்ணத்தில் உருவானவை தான். தற்போது திலீப் நடித்துவரும் புரொபஷர் டிங்கன் படத்தில் ஆக்சன் காட்சிகளை வடிவமைக்க ஒபந்தம் ஆகியிருக்கிறார்.
இந்தப்படத்தில் திலீப் ஒரு மேஜிக் மேனாக நடிக்கிறார். அதுமட்டுமல்ல படமும் 3டியில் பிரமாண்டமாக உருவாகிறது. அதனால் இதுவரை இல்லாதவிதமாக புதிய பாணியில் ஆக்சன் காட்சிகளை வடிவமைக்க உள்ளாராம் கேச்சா. மம்முட்டி தற்போது நடித்துவரும் வரலாற்றுப்படமான மாமாங்கம் படத்திலும் இவர்தான் ஆக்சன் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.