Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சர்கார்' - சென்னை ஏரியா ரூ.7 கோடி

10 அக், 2018 - 15:09 IST
எழுத்தின் அளவு:
Sarkar-chennai-rights-sold

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது. வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

தெலுங்கிலும் விஜய்க்கு மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால் 'சர்கார்' படத்தைத் தெலுங்கிலும் வெளியிடுகின்றனர். சர்கார் படத்தின் பின்னணி இசையமைக்கும் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம், தெலுங்கு பதிப்புக்கான பாடல்களை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், 'சர்கார்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 65 கோடிக்கு வாங்கயுள்ள ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், அதை ஏரியாவாரியாக பிரித்து விற்கும் பணியை செய்து வருகிறது.

அதன்படி, சென்னை நகரத்தின் வெளியீட்டு உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார். 7 கோடி கொடுத்து அந்த உரிமையைப் பெற்றுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான 'துப்பாக்கி', 'மெர்சல்' படங்களை சென்னை நகரத்தில் வெளியிட்டு மிகப்பெரிய லாபம் பார்த்தவர் அபிராமி ராமநாதன் என்பது கூடுதல் தகவல்.

Advertisement
வெள்ளை புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்வெள்ளை புலியை தத்தெடுத்த ... வன்முறைக்கு பரிசாக வடசென்னை படத்துக்கு ஏ சான்றிதழ் வன்முறைக்கு பரிசாக வடசென்னை ...


வாசகர் கருத்து (5)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
11 அக், 2018 - 18:39 Report Abuse
Vasudevan Srinivasan ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த திரையரங்கங்களிலும் வெளியிட்டு முதலிலேயே (ஒபெனிக்) முதலை (இன்வெஸ்ட்மென்ட்) எடுக்கும் வித்தையை சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த ஏவிஎம்மின் 'சிவாஜி' மூலம் துவக்கி வைத்தவர் திரு. அபிராமி இராமநாதன் அந்த வகையில் 'சர்க்கார்' நிச்சயம் வெற்றிபெறும்..
Rate this:
JMK - Madurai,இந்தியா
12 அக், 2018 - 14:57Report Abuse
JMKரஜினி ஓத்தருக்கு மட்டும் அது செல்லுபடியாகும் ?...
Rate this:
hindustani - beijing,சீனா
11 அக், 2018 - 10:43 Report Abuse
hindustani Actor Joseph Vijay and his father SA Chandrasekhar make statement against Hindu god’s e.g. controversial comments about Tirumala Tirupati. Still most of Hindu’s are supporting him. If you are real hindu don’t support him, he never ever sp single penny to his fan club.
Rate this:
10 அக், 2018 - 22:30 Report Abuse
சுறாபாண்டி பாலகிருஷ்னாவுக்கே சவால் விட்டவர் எங்க தளபதி, அல்லு சில்லு செதரும்,
Rate this:
JMK - Madurai,இந்தியா
10 அக், 2018 - 17:49 Report Abuse
JMK விஜய்க்கு தெலுகு மார்க்கெட்டா ? ஐயோ சாமி முடுயலடா ? மகேஷ் பாபுக்கு இங்கு என்ன மார்க்கெட்டோ அதே நிலைமை தான் விஜய்க்கு ? படம் ஒரு வாரம் கூட தெலுங்கில் ஓடினாள் பெரிய விஷயம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in