இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்தவாரம் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 96. ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கிய இப்படம், வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யாவும், இளம் வயது த்ரிஷாவாக கௌரி கிஷனும் நடித்திருந்தனர்.
ஆதித்யாவும், கௌரியும் ஒன்றாக இருக்கும் போட்டோ சமூக வலைதளத்தில் வெளியானதோடு, இருவரும் காதலிப்பதாகவும் செய்தி பரவியது. ஆனால் இதை இருவரும் மறுத்துள்ளனர்.
கெளரி கூறியதாவது : 96 படத்தில் நானும், ஆதித்யாவும் ராம் மற்றும் ஜானு கேரக்டரில் காதலர்களாக நடித்தோம். திரைக்கு பின்னால் இல்லை. எங்களைப் பற்றிய தவறான வதந்திகளை பரப்பாதீர்கள் என தெரிவித்திருக்கிறார்.
கவுரியின் பதிவை ரீ-டுவீட் செய்துள்ள நடிகர் ஆதித்யா பாஸ்கர், நானும் கவுரியும் சிறந்த நண்பர்கள், எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை. சினிமா நடிகர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள் என பதிவிட்டிருக்கிறார்.