அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
வெங்கட் பிரபு இயக்கிய சென்னை- 600028 படத்தில் நடிகராக முகம் காட்டிய நித்தின் சத்யா, ஜருகண்டி என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகியிருக்கிறார். நிதின் சத்யா உடன் இணைந்து, பத்ரி கஸ்தூரி என்பவரும் 'ஜருகண்டி'படத்தை தயாரிக்கிறார்.
ஜெய் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் முடிவடைந்து பல மாதங்களாகிவிட்ட நிலையில் படத்தை வாங்குவதற்கு ஆளில்லை. வெங்கட் பிரபுவின் உதவியாளரான ஏ.என்.பிச்சுமணி இயக்கியுள்ள இந்த படம் சமீபத்தில் சென்சாருக்கு சென்றது.
படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் 'ஜருகண்டி' படத்துக்கு அனைவரும் பார்க்க கூடிய படத்திற்கான 'U' சான்று வழங்கியுள்ளார்கள். இப்படத்தை இம்மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். வழக்கம்போல் படத்தின் புரமோஷனுக்கு வர மறுத்துவிட்டார் ஜெய்.
நண்பன் என்ற அடிப்படையில் அவரை அழைத்துப்பார்த்து வெறுத்துப்போய்விட்டாராம் நிதின் சத்யா. இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.எல்.பிரவீன் படத்தொகுக்கு செய்துள்ளார். போபோ சஷி இசை அமைத்துள்ளார்.