Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சன்னி லியோனின் தமிழ் படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு

09 அக், 2018 - 12:50 IST
எழுத்தின் அளவு:
Oppose-for-Sunny-Leone-acting-in-Veeramadevi

இந்திய வம்சா வழியைச் சேர்ந்த கனடா நடிகை சன்னி லியோன். கனடா நாட்டின் புகழ்பெற்ற போர்னோகிராபி நடிகை. உலக அளவில் டாப் 10க்குள் இருக்கிறார். ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்குள் வந்த அவர், பாலிவுட் படங்களில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். தற்போது வீரமாதேவி என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இதனை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். இவர், சாமிடா, தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை படங்களை இயக்கியவர். இந்தப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் படத்தில் சன்னி லியோன் நடிக்க கூடாது என கடந்த சில வாரங்களுக்கு முன்பு கன்னட ரக்ஷின வேதிகா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் இந்த அமைப்பினர் நேற்று பெங்களூருவில் சன்னி லியோன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சன்னி லியோன் உருவ பொம்மையை எரித்தனர். பின்னர் இந்த அமைப்பின் தலைவர் ஹரீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:


வீரமாதேவி ஒரு சரித்திர நாயகி, கர்நாடக மாநிலத்தில் அவர் பல கோவில்களை கட்டியுள்ளார். கன்னட மக்கள், அவரை தெய்வமாக வணங்கி வருகிறார்கள். அப்படிப்பட்டவர் கதாபாத்திரத்தில் ஒரு ஆபாச நடிகை நடிப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். படத்தை கன்னடத்தில் திரையிட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in