'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு காதல் படம் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் அளவிற்கு ரசிக்க வைத்துள்ளது. அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா முதல் முறையாக இணைந்து நடித்த '96' படம்தான் அப்படி ஒரு மாயத்தைச் செய்துள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள்.
விஜய் சேதுபதி எப்போதுமே சிறப்பாக நடித்துவிடுவார். அதனால் அவருடைய நடிப்பு ரசிகர்களுக்குப் புதிததல்ல. ஆனால், திரையுலகத்தில் அறிமுகமான இந்த 16 வருடங்களில் த்ரிஷா முதல் முறையாக மிகவும் யதார்த்தமாக நடித்துள்ள படம் '96' என்று அனைவராலும் பாராட்டப்படுகிறார். டுவிட்டரில் பலரும் த்ரிஷாவுக்கு இது பற்றி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் த்ரிஷா நன்றி தெரிவித்து பதிலளித்து வருகிறார்.
'96' படத்தின் ஜானு கதாபாத்திரம் த்ரிஷா இதற்கு முன் நடித்த சிறந்த காதல் படமான 'விண்ணைத் தாண்டி வருவாயா' ஜெசி கதாபாத்திரத்தை விட சிறப்பாக இருப்பதாகப் பலரும் குறிப்பிடுகிறார்கள். தற்போது 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பில் வெளியூரில் இருந்தாலும் '96' படத்தின் பாராட்டுக்களை டுவிட்டரில் இடைவேளை கிடைக்கும் போதெல்லாம் இடைவிடாமல் படிக்கிறாராம் த்ரிஷா.