தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழகத்தில் நிலவும் சாதிய முரண்களைப் பேசும் படங்கள் அண்மைக்காலமாக வெளியாவது மட்டுமல்ல, மக்கள் மத்தியில் வரவேற்பும் பெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான பரியேறும் பெருமாள் இதற்கு ஒரு உதாரணம்.
இந்நிலையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க உருவாகியுள்ள 'சர்வம் தாள மயம்' படமும் சாதிய முரண்களைப்பேசுகிற படம்தானாம். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ஒரு டஜன் பாடல்கள் உள்ளன. இதை எல்லாம் வைத்து இப்படத்தை இசைப்படம் என்று நினைத்தனர்.
உண்மையில் இப்படத்தின் கதையே வேறு. ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்றுக்கொள்ள விரும்புகிறான் பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தை சார்ந்த இளைஞன். அவன் பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவனுக்கு மிருதங்கம் கற்றுக்கொடுக்க மறுக்கின்றனர். கர்நாடக இசையைக் கற்றுக்கொடுக்கும் சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான்! அதிலிருந்து எப்படி மீண்டுவருகிறான் என்பதே சர்வம் தாள மயம் படத்தின் கதை.
'மின்சாரக்கனவு', 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' ஆகிய படங்களை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கியுள்ள 'சர்வம் தாள மயம்' படம் 31-வது டோக்கியோ பிலிம் பெஸ்டிவெலில் விரைவில் பிரத்தியேகமாக திரையிடப்படவிருக்கிறது.
இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காஷ்மீர், ஷில்லாங், ஜெய்ப்பூர், கேரளா ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது.