தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவின் வளர்ச்சி அபிரிமிதமானது. அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே ஓவியா ஆர்மியை தொடங்கி விட்டனர். பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன் ஓவியா நடித்து முடித்திருந்த சீனி என்ற படத்திற்கு ஓவியாவை விட்ட யாரு? என்று தலைப்பையே மாற்றி விட்டார்கள்.
தற்போது ஓவியா பிருத்வி பாண்டியராஜனுடன் கணேசா மீண்டும் சந்திப்போம் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹரிகீதா பிக்சர்ஸ் சார்பில் அருண் விக்ரம கிருஷ்ணன் தயாரிக்கிறார். ரத்தீஷ் எரட்டே என்ற புதுமுகம் இயக்குகிறார். விபின் கே.ராஜ், சிபி இசை அமைக்கிறார்கள்.
இந்தப் படத்தின் புரமோசனுக்காக ஓவியாவை புகழ்ந்து ஒரு பாடல் வெளியிட்டிருக்கிறார்கள். "வியா வியா ஓவியா... நீ கிளியோபாட்ரா ஆவியா.. நீ மனச திறக்கும் சாவியா..." என தொடங்கும் அந்த பாடல் தற்போது யூ டியூப்பில் வெளியிடப்பட்டு வைரலாக கேட்கப்பட்டு வருகிறது.