ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
ஒளிப்பதிவாளரும், அறிமுக இயக்குநருமான பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்துள்ள 96 படம் அக்டோபர்-4 அன்று வெளியானது. படவெளியீட்டுக்கு முன்னதாகவே இப்படம் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது.
பத்திரிகையாளர்களின் பாசிட்டிவ்வான விமர்சனங்களை அறிந்த தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு இந்த படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்து தயாரிக்க முன் வந்துள்ளார். இவரும், தெலுங்கு நடிகர் நானியும் சமீபத்தில் 96 படத்தை பார்த்துள்ளார்கள்! இந்தப்படம் இருவருக்கும் பிடித்துபோனததால் பெரியவிலை கொடுத்து 96 படத்தின் தெலுங்கு ரீ-மேக் உரிமையை வாங்கியுள்ளார் தில் ராஜு.
96 படத்தில் விஜய்சேதுபதி நடித்த கேரக்டரில் தெலுங்கில் நானி நடிக்கிறார். கதாநாயகியாக த்ரிஷா நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது!