‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விவேகம் படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இரண்டாவது முறையாக அஜித் நடிக்கும் படம் 'விஸ்வாசம்'. நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் இது.
நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரமேஷ் திலக் என ஏகப்பட்ட காமெடியன்கள் நடிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர்.
இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புகாக விரைவில் மும்பை செல்லவிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, 'விஸ்வாசம்' படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் இப்படத்தின் வியாபாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
'விஸ்வாசம்' படத்தின் தமிழக விநியோக உரிமையை, நயன்தாராவின் மானேஜரும், நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்', பிரபு தேவா நடிப்பில் வெளியான 'குலேபகாவலி' படங்களை தயாரித்தவருமான கோட்டபடி ராஜேஷ் வாங்கியுள்ளார்.
சுமார் ரூ.50 கோடி ரூபாய்க்கு தமிழக விநியோக உரிமையை வங்கியுள்ளார். ஏரியா வாரியாக பிரித்து குறைந்தபட்சம் ரூ.65 கோடிக்கு பிசினஸ் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். இது வெற்றிகரமாக முடித்தால் அஜித்தின் அடுத்தப்படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பு இதே நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.