ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானபோது விஜய் புகைப்பிடித்தபடி போஸ் கொடுத்ததற்கு எதிர்ப்புகள் எழுந்தது. அதனால் சர்கார் படத்தை அப்போதே பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதையடுத்து அப்படத்தின் சிம்ட்டாங்காரன், ஒரு விரல் புரட்சி பாடல்களில் சிங்கிள் டிராக்கை வெளியிட்டார்கள்.
அக்டோபர் 2-ந்தேதி சர்கார் இசை வெளியீடு நடந்தது. அந்த விழாவில், அரசியல், ஊழல் குறித்து விஜய் பேசியதால் மீண்டும் பரபரப்பு பற்றிக் கொண்டது. இந்நிலையில், தீபாவளிக்கு படம் திரைக்கு வருவதால், சர்கார் டீசர் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த நேரத்தில், வருகிற ஆயுத பூஜை அன்று சர்கார் படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.