ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் இரண்டாவது சீசன் நடந்து முடிந்திருக்கிறது. நடிகை ரித்விகா பட்டம் வென்றார். ஐஸ்வர்யா தத்தா இரண்டாம் இடம் பிடித்தார். முதல் சீசனை ஒப்பிடும்போது அந்த அளவிற்கு இல்லை என்றாலும், சண்டை சச்சரவு, மோதல் என நகர்ந்தது. வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வந்த கமல், அதன் போட்டியாளர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் தன் சார்பில் விருந்து கொடுத்தார். அப்போது போட்டியாளர்கள் ஒருவருடன் ஒருவர் இணைந்தும், குரூப்பாகவும் செல்பி எடுத்துக் கொண்டனர். கமலுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு கமல் விலை உயர்ந்த வீவோ செல்போனை பரிசாக வழங்கினார்.
சில முக்கியமான போட்டியாளர்கள் இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்கான காரணம் தெரியவில்லை.