அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இந்திய தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று கோன் பனேகா குரோர்பதி. இந்த நிகழ்ச்சி ஸ்டார் நெட் ஒர்க் டி.விக்களில் பல்வேறு மொழிகளில், நடத்தப்பட்டது. தமிழில் விஜய் டி.வியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற பெயரில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் 10வது சீசன் ஹிந்தியில் நடந்து வருகிறது. இதனை அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். நிகழ்ச்சியின் தலைப்பு கோன் பனேகா குரோர்பதி என்று இருந்தாலும் அனைத்து கேள்விக்கும் பதில் அளித்து ஒரு கோடி வென்றவர்கள் ஒரு சிலரே. இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் அசாமை சேர்ந்த டியூசன் ஆசிரியை பினிதா ஜெயின் ஒரு கோடி ரூபாய் பரிசை வென்றிருக்கிறார்.
நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட 14 கேள்விகளுக்கும் சரியாக பதில் அளித்தார் பினிதா ஜெயின். கவுகாத்தியில் வசிக்கும் பினிதா ஜெயின், கல்வி குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது மகன் மகள்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உயர் படிப்பு படித்து வருகிறார்கள். 15வது கேள்விக்கு பதில் அளித்தால் 7 கோடி பரிசு என்றும், தவறான பதில் அளித்தால் வெறும் 10 லட்சத்துடன் வெளியேறலாம் என்ற டீலிங்கை ஏற்க மறுத்து ஒரு கோடி பரிசுடன் தனது போட்டியை நிறைவு செய்து கொண்டார் பினிதா ஜெயின்.