பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஹிந்தித் திரையுலகத்தில் கங்கனா ரணாவத் என்றாலே சர்ச்சை என்று சொல்லும் அளவிற்கு அவரைப் பற்றி அடிக்கடி சர்ச்சைக்குரிய செய்திகள் வந்து கொண்டேயிருக்கும். அவர் தற்போது நடித்து வரும் 'மணிகர்னிகா' படம் பற்றியும் அடிக்கடி சர்ச்சைகள் வந்து கொண்டேயிருந்தது.
சில வாரங்களுக்கு முன்பு அப்படத்திற்கான விடுபட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்ட போது கிளாப் போர்டில் இயக்குனர் பெயரில் கிரிஷ் என்பதற்குப் பதிலாக கங்கனா ரணாவத் என்று இருந்தது. அது பற்றி அப்போதே சர்ச்சை ஆரம்பமானது. ஆனால், கிரிஷ், தெலுங்கில் 'என்டிஆர்' படத்தை இயக்கப் போய்விட்டதால் அவருக்குப் பதிலாகத்தான் கங்கனா இயக்குனர் ஆகவும் மாறினார் என்றார்கள்.
இப்படத்தின் டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிட்ட போது அதில் இயக்குனர் பெயரில் யார் பெயர் இடம் பெறும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதில் இயக்குனர் என ராதாகிருஷ்ண ஜகர்லமுட் என்ற பெயர் இருந்ததால் சிலர் குழப்பமடைந்தனர். அந்தப் பெயர் இயக்குனர் கிரிஷ்-ன் முழுப் பெயர் என்பது பலருக்குத் தெரியாது. தான் சில காட்சிகளை இயக்கினாலும் படத்தின் இயக்குனர் ஆக கிரிஷ் பெயரே இடம் பெற்றிருப்பது டோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ள 'பாகுபலி' கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் தான், கிரிஷை இயக்குனராக சிபாரிசு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.