தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'NGK' படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு ஏதோ சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
சூர்யாவும், செல்வராகவனும் முதன் முதலாக இணைந்துள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்நிலையில், 'செப்டம்பர் மாதம் முடிந்து விட்டது. இம்மாதம் (அக்டோபர்) 'NGK' குறித்து அடுத்தடுத்து பல அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது'' என்று சில தினங்களுக்கு முன் டுவீட் செய்தார் இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு.
அவரது இந்த அறிவிப்பை வைத்துப் பார்க்கும்போது 'NGK' படம் சம்பந்தமான பல புதிய தகவல்கள் சூர்யாவின் ரசிகர்களுக்கு கிடைக்க இருக்கிறது என்றே தோன்றுகிறது.
முக்கியமாக, 'NGK' படத்தின் டீசர் ரிலீஸ், டிரைலர் ரிலீஸ், சிங்கிள் டிராக் ரிலீஸ், ஆடியோ ரிலீஸ் என அடுத்தடுத்து 'NGK' கொண்டாட்டங்கள் தொடங்க இருக்கிறதுபோலும்.
பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் 'NGK' படத்தை 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது.