அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
'மெர்சல்' படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்தவர் நித்யா மேனன். அவர் புஷ்டியாக இருப்பதாலேயே அவருக்கு படவாய்ப்புகள் அதிகம் இல்லாமல் போனதாக, அவருக்கு பல இயக்குநர்களும் அறிவுரைச் சொல்ல, அவர் உடல் எடையைக் குறைக்கும் பணியில் இறங்கினார்.
இந்நிலையில், அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேரக்டரில் 'த அயர்ன் லேடி' என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இது குறித்து நித்யா மேனன் கூறியதாவது:
ஆளுமைமிக்க தலைவியாக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்தமைக்காக சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு அதிர்ஷ்டம் இருப்பதாலேயே அந்த கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன். நான் புஷ்டி என்று சொல்லி, எல்லோரும் என்னை புறம் தள்ளியபோது, அதிர்ந்து போனேன்.
தற்போது, அந்த புஷ்டியே எனக்கு உதவி இருக்கிறது. அதனாலேயே, ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இனி, புஷ்டியாக இருப்பது குறித்து கவலைப்படப் போவதில்லை. அதற்காக, ஒரு எல்லையைக் கடந்து புஷ்டியாக இருக்கக் கூடாது என்றும் முடிவெடுத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.