ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிரஞ்சீவி, அமிதாப், விஜய்சேதுபதி, சுதீப், நயன்தாரா, தமன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் பிரமாண்டமாக உருவாகி வருகிறது 'சைரா நரசிம்ம ரெட்டி' படம். சுரேந்தர் ரெட்டி இயக்கி வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தின் சில காட்சிகளை, அதிலும் படத்தில் வெறும் எட்டு நிமிடங்களே இடம்பெரும் காட்சிகளை படமாக்குவதற்காக ஜார்ஜியாவில் சுமார் 5௦ கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமான செட்டுகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என ஒரு தகவல் வெளியானது.. ஆனால் இதை தயாரிப்பு தரப்பில் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “பிரமாண்டமாக காட்சிகளை எடுத்து வருகிறோம் என்பது உண்மை தான். ஆனால் 5௦ கோடி ரூபாய் என்பதெல்லாம் உண்மையல்ல. இங்கே ஜார்ஜியாவிலேயே தேவையான அளவுக்கு கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் இருப்பதால் எங்களுக்கு செட் அமைக்கும் வேலையும் செலவும் குறையவே செய்துள்ளது. மேலும் இங்குள்ள உள்ளூர்வாசிகளையே படப்பிடிப்பில் பயன்படுத்திய வகையில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கான செலவும் கூட எங்களுக்கு மிச்சம் தான்” என கூறியுள்ளனர்.