இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
யு டியூப்பில் அவ்வப்போது சில வீடியோக்கள் டிரண்டிங் ஆகும். அந்த வீடியோ சம்பந்தப்பட்டவர்கள் திடீர் பிரபலமாவார்கள். அந்த வகையில் சமீபத்தில் பிரபலமானவர் பிஜிலி ரமேஷ். குடிபோதையில் அவர் உளறியதே அவரை பிரபலப்படுத்தியது. "நீ விக்கிற நான் குடிக்கிறேன்" என்ற அவரது டயலாக் வைரல் ஆனது.
சினிமாவின் கவனமும் பிஜிலி ரமேஷ் பக்கம் திரும்பியது. கோலமாவு கோகிலா படத்தின் புரமோசன் பாடலில் தலைகாட்டிய பிஜிலி ரமேஷ், இப்போது சினிமாவில் பிசியாகி வருகிறார். சில படங்களில் ஓரிரு காட்சிகளில் நடித்து வரும் ரமேஷ், தற்போது அமலாபால் நடிக்கும் ஆடை படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். ரத்னகுமார் இயக்கும் இந்தப் படத்தில் தற்போது பிஜிலி நடித்து வருகிறார். இந்தப் படம் பிஜிலி ரமேஷின் சினிமா கேரியரை துவக்கி வைக்கும் என்கிறார்கள்.