விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
2018ம் ஆண்டில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய ஸ்டிரைக் சமயம் தவிர மற்ற வாரங்களில் ஒவ்வொரு வாரத்திலும் போட்டி இருந்து வந்தது. ஏதோ, ஒரு சில வாரத்தில் மட்டுமே போட்டி இல்லாமல் இருந்தது. இந்தப் போட்டிகளைத் தவிர்க்க தயாரிப்பாளர்கள் சங்கமும் ஏதேதோ செய்து பார்த்தும் சில தயாரிப்பாளர்கள் அவர்களாகவே படங்களை வெளியிட்டு சிக்கலை ஏற்படுத்தியதாகச் சொன்னார்கள்.
இப்போது அந்த வெளியீட்டில் மேலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். முதல் மற்றும் மூன்றாவது வாரத்தில் பெரிய படங்களும், இரண்டாவது மற்றும் நான்காவது வாரத்தில் சிறிய படங்களும் வெளியிடலாம் என்று கூறியிருக்கிறார்கள். இந்த வாரம் அக்டோபர் 4ம் தேதி விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள '96' படமும், அக்டோபர் 5ம் தேதி விஜய் தேவரகொன்டா, மெஹ்ரீன் நடித்துள்ள 'நோட்டா', விஷ்ணு விஷால், அமலா பால் நடித்துள்ள 'ராட்சசன்' ஆகிய படங்களும் வெளியாக உள்ளன.
இவற்றில், “96, நோட்டா' ஆகிய இரண்டு படங்கள் மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. '96' படம் காதலாலும், 'நோட்டா' படம் அரசியலாலும் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில வித்தியாசமான நடிகர் எனப் பெயரெடுத்துள்ள விஜய் சேதுபதி, தெலுங்கில் அப்படி ஒரு பெயரை எடுத்துவிட்டு, தமிழில் அறிமுகமாக உள்ள விஜய் தேவரகொன்டா இருவருக்கிடையேயான போட்டி இந்த வாரம் பலமாக இருக்கும் என்றே தெரிகிறது.