ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் என சமீபகாலமாக தெலுங்கில் வசூல் நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, நேரடியாக தமிழ் பேசி நடித்துள்ள நோட்டா வரும் அக்டோபர் 5ம் தேதி வெளியாக உள்ளது. அரிமா நம்பி, இருமுகன் பட இயக்குனர் ஆனந்த் சங்கர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
ஆனால் முதலில் இந்தப்படம் அல்லு அர்ஜுனுக்குத் தான் சென்றதாம். ஆனால் இந்த கதை தனக்கு செட்டாகாது என கூறி நிராகரித்துவிட்டாராம் அல்லு அர்ஜுன். ஏற்கனவே ஸ்பைடரில் மகேஷ்பாபு சறுக்கியது, தான் நடித்த 'என் பெயர் சூர்யா'வும் தமிழில் வரவேற்பை பெறாதது என சில தயக்கங்கள் அவரை இந்த படத்தை ஒப்புக்கொள்ள விடாமல் செய்துவிட்டனவாம்.
ஒருவேளை 'நோட்டா' ரசிகர்களை கவர்ந்துவிட்டால் அல்லு அர்ஜுனுக்கு தமிழில் கால் பதிக்க கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு கைவிட்டு போனதாகத்தான் அர்த்தம்.