'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினி - அக்சய்குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள படம் 2.0 படம் நவம்பர் 29-ந்தேதி வெளியாகிறது. ரூ. 500 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. படத்தில், ரஜினி ஐந்து கெட்டப்பிலும், அக்சய் குமார் 12 கெட்டப்புகளிலும் நடிப்பதாகவும், அக்சய் குமார் ரிச்சர்ட் என்ற விஞ்ஞானி வேடத்தில் நடித்திருப்பதாகவும், துரதிர்ஷ்டமான பரிசோதனைக்குப்பிறகு கெட்டவராக மாறுவார் என்றும் இணையதளங்களில் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து ஷங்கர் கூறுகையில், இந்த செய்திகளில் துளியும் உண்மையில்லை. இவை அனைத்துமே வதந்திகள் என்று சொல்லி சிரித்திருக்கிறார். மேலும், ரஜினி வேடத்தை விட அக்சய்குமாரின் வில்லன் கேரக்டர் பற்றி கற்பனைக்கே எட்டாத வகையிலான வதந்திகள் உலவிக் கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார் ஷங்கர்.