ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய்சேதுபதியுடன் த்ரிஷா நடித்திருக்கும் படம் 96. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த த்ரிஷா கூறியதாவது:
ரஜினி சாருடனும், விஜய் சேதுபதியுடனும் நடிக்க வேண்டும் என்கிற என் ஆசை நிறைவேறி விட்டது. அடுத்த ரவுண்டுக்கு நானும் தயாராகி விட்டேன். பேட்ட படத்திற்காக உடல் எடையையும், தலை முடியையும் குறைத்துக் கொண்டேன். பெரிய சூப்பர் ஸ்டார் என்ற எந்த தலைக்கனமும் இல்லாமல் எளிமையாக பழகினார். உங்களுடன் நடிப்பது என் கனவு என்றேன். கலகலவென சிரித்தார்.
எனது திருமணம் பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. எனக்கு யாருடனும் காதல் இல்லை. பாய் பிரட்ண்ட் யாரும் கிடையாது. சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பு பெண்களுக்கு கிடைத்திருக்கும் மரியாதை. மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் ஆர்வத்தில் இருந்தேன். இப்போது வேறு யாரோ நடிப்பதாக சொல்கிறார்கள். அதனால் எனக்கு வருத்தம் இல்லை என்றார் த்ரிஷா.