ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள '2.0' படம் வரும் நவம்பர் மாதம் 29ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவானாலும், அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இரண்டாவது பாகத்திற்காக 'என்ஓசி' வழங்காததால் படத்திற்கு 'எந்திரன் 2' என்றும் பெயர் வைக்க முடியவில்லை.
அதோடு, இந்த 2.0 படத்தின் கதையையும் புதிதாக உருவாக்கியுள்ளதாகவே தெரிகிறது. 'எந்திரன்' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். இரண்டாவது பாகத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இருப்பினும் 'எந்திரன்' படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராய் '2.0' படத்தில் ஒரு கேமியோ தோற்றத்தில் நடித்திருப்பதாகத் தகவல் பரவி வருகிறது.
இது குறித்து இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை. ஆனால், 'எந்திரன்' படத்துடன் '2.0' படத்தையும் தொடர்புபடுத்த வேண்டும் என்பதற்காக அவருடைய கதாபாத்திரம் பயன்பட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.