ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அமிதாப் பச்சன், ஆமீர்கான் இணைந்து நடித்துள்ள 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' படத்தின் டிரைலர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. தென்னிந்திய மாநிலங்களிலும் டிரைலருக்கு வரவேற்பு உள்ளது. இந்தநிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அமிதாப் மற்றும் ஆமீர்கான் இருவருக்கும் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “நாங்கள் எல்லோரும் 'தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்' படத்தை விரைவில் தமிழ்நாட்டில் பார்த்து ரசிக்க போகிறோம். அதேபோல எங்களது தமிழில் பா.ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் டைரக்சனில் வெளியாகியுள்ள, மனிதத்தையும் இன்னும் மாறவே மாறாத சமத்துவமின்மையையும் பேசியிருக்கின்ற 'பரியேறும் பெருமாள்' படத்தை நீங்களும் பார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என பதிவிட்டிருக்கிறார்.