ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடிக்க பிரேம்குமார் இயக்கத்தில் அடுத்த வாரம் வெளியாக உள்ள '96', விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாக உள்ள 'சர்கார்' ஆகிய இரண்டு படங்களின் தெலுங்கு உரிமை நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
இதில் '96' படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. 'சர்கார்' படம் தெலுங்கில் டப்பிங் ஆகி தமிழில் வெளியாகும் அதே தினத்தில் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.
'96' படம் தமிழில் வெளியீட்டிற்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்டதால் தெலுங்கின் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு படத்தைப் பார்த்து வியந்து உடனே ரீமேக் உரிமையை வாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். ஒரு கோடிக்கும் அதிகமாக விலை போனதாகத் தகவல்.
தெலுங்கின் இளம் நாயகனான நானி, '96' படத்தைப் பார்த்து பல காட்சிகளில் அழுததாகவும் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க அவர் ஆர்வம் காட்டி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. சமந்தா நாயகியாக நடிக்கலாம் என்றும் தகவல். ஆனால், தெலுங்கு உரிமையை வாங்கியுள்ள நிறுவனம் படத்தில் யார் நடிக்கப் போவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளது.
'சர்கார்' படத்தின் டப்பிங் உரிமை மட்டும் சுமார் 6 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.