ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'சன் பிக்சர்ஸ்' நிறுவனம், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'பேட்ட', ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படங்களை தயாரிக்கிறது.
'பேட்ட' படத்தின் வேலைகள் முடிவடைந்ததும், ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை தொடங்குகிறார்கள். இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.
'எந்திரன்', 'பேட்ட' ஆகிய படங்களை தொடர்ந்து 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் ரஜினி நடிப்பில் தயாரிக்கும் மூன்றாவது படம் இது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.
இந்தப்படத்தை அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.