தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சண்டக்கோழி படத்தில் விஷால் ஜோடியாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. அப்போது நிருபர்கள் "நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் படத்தில் நடிக்கிறார். அவருக்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுப்பீர்களா?" என்று விஷாலிடம் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த விஷால் "ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி. அவருக்கு நாங்கள் பாதுகாப்பு தர வேண்டியதில்லை. அவரே எல்லா இடத்திலும் கேமரா வைத்து தனது பாதுகாப்பை பார்த்துக் கொள்வார். அதனால் படம் எடுப்பவர்களும் தைரியாக எடுக்கலாம்" என்றார். இந்த பதிலை கேட்ட அனைவரும் சிரித்தனர். விஷால் பக்கத்தில் இருந்த கீர்த்தியும் சிரித்து விட்டார்.
இந்த சிரிப்பு ஸ்ரீரெட்டிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை அவர் தன் பேஸ்புக்கில் கொட்டியிருக்கிறார். அவர் எழுதியிருப்பதாவது: கீர்த்தி சுரேஷின் சிரிப்பு ரொம்ப கேவலமாக இருந்தது. கவலைப்படாதீர்கள் மேடம். எப்போதுமே நீங்கள் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது. ஒரு நாள் போராடுகிறவர்களின் வலியை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் சிரித்ததை நான் மறக்க மாட்டேன். நினைவில் வைத்துக் கொள்வேன். இப்போது நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள்.
இவ்வாறு எழுதியிருக்கிறார்.