பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
தனுஷ் தயாரித்து, நடித்துள்ள படம் வட சென்னை. வெற்றி மாறன் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் இணை தயாரிப்பில் இருக்கிறது. தனுசுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரகனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் அடுத்த மாதம் 17ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரையிடப்பட இருக்கிறது. அடுத்த மாதம் 11ந் தேதி முதல் 20ந் தேதி வரை பிங்யாவோ சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் 3வது நாளில் வடசென்னை திரையிடப்படுகிறது.
இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் படம் வடசென்னை. சீனாவில் நடக்கும் மிகப்பெரிய திரைப்பட விழா இது. இதற்கு முன்பும் வடசென்னை பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.