மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
நடிகர் அஜித், இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் விஸ்வாசம் படத்தின் படபிடிப்பும் விரைவில் முடிவடையவிருக்கிறது. படத்தின் புரமோஷன் வேலைகளை வேகமாக துவங்கி இருக்கும் படத் தயாரிப்புக் குழுவினர், முதலில் கிறிஸ்மஸ் நாளில் படத்தை வெளியிடலாம் என திட்டமிருந்தனர். ஆனால், படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட போது பொங்கல் நாளில் படத்தை வெளியிடுவதாக அறிவித்தனர்.
அதேப்போன்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட திரைப்படம் லக்னோவில் வேகமாக நடந்து வருகிறது. விடுதி வார்டனாக ரஜினி நடித்து வருவதாக சொல்லப்பட்ட இந்தப் படத்தில், ரஜினி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வேடத்தில் நடித்து வருவதாக தற்போது கூறப்படுகிறது. வரும் டிசம்பருக்குள் படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, பேட்ட திரைப்படத்தை பொங்கல் திருநாளில் வெளியிடலாம் என படக் குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.
இதனால் பொங்கல் நாளில் ரஜினி - அஜித் படங்கள் மோத உள்ளன. வசூலில் எந்தப் படம் அதிகம் குவிக்கும் என்ற போட்டி, இரு தரப்பு ரசிகர்களுக்கும் எழுந்துள்ளது.