துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
பாகுபலி நாயகன் பிரபாஸ், அந்த ஒரே படத்தில் இந்திய அளவில் பிரபலமான நடிகராகி விட்டார். அந்தபடம் வெளியான நேரத்தில் பிரபாசும், அனுஷ்காவும் காதலிப்பதாகவும் விரைவில் அவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகின.
பின்னர் அந்த செய்தியை அவர்கள் இருவருமே மறுத்தனர். நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே, எங்களுக்கிடையே காதல் எதுவும் இல்லை என்று கூறினார்கள். இதையடுத்து, அனுஷ்கா எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. ஆனால் பிரபாஸ் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அக்டோபர் 23-ந் தேதி தனது 39வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் பிரபாஸ். அன்றைய தினத்தில் அவர், தனது வருங்கால மனைவி குறித்த தகவலையும் வெளியிடுகிறாராம். ஆக, பிரபாஸின் வருங்கால மனைவி அனுஷ்காவா இல்லை வேறு பெண்ணா என்பது விரைவில் தெரிந்து விடும்.