Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லதா மங்கேஷ்கர் : இசை குயிலுக்கு இன்று பிறந்த நாள்

28 செப், 2018 - 13:14 IST
எழுத்தின் அளவு:
Happy-Birthday-to-Lata-Mangeshkar

இந்தியாவின் இசை குயில் லதா மங்கேஷ்கருக்கு இன்று(செப்., 28) 89-வது பிறந்த நாள். அவரை பற்றிய பத்து முத்துக்கள்.

1. 1929 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் நாள் இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள “இந்தூர்” என்ற இடத்தில் பண்டிட் தீனநாத் மங்கேஷ்கருக்கும், செவந்திக்கும் மகளாக ஒரு “கோமன்டக் மராட்டிய” குடும்பத்தில் பிறந்தார்.


2. தன்னுடைய ஐந்து வயதிலேயே தந்தையிடம் இசைப் பயிலத் தொடங்கினார். பிறகு, புகழ் பெற்ற அமான் அலி கான் சாகிப் மற்றும் அமநாத் கான் ஆகியோரின் கீழ் இசைப்பயிற்சி மேற்கொண்டார்.


3. 1942 ஆம் ஆண்டு சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார். “மஜ்பூர்” என்ற படம் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது .


4. 1973 ஆம் ஆண்டு, ஆர்.டி.பர்மன் இசையமைத்து வெளிவந்த “பரிஜாய்” என்ற திரைப்படதில் இவர் பாடிய “பீதி நா பிட்டை” என்ற பாடல் சிறந்த பின்னனி பாடகிக்கான முதல் “தேசிய விருதை” பெற்றுத்தந்தது.


5. 1961-ல் பஜனை பாடல்கள் அடங்கிய “அல்லாஹ் தேரா நாம்” மற்றும் “பிரபு தேரா நாம்” என்ற இரண்டு ஆல்பத்தை வெளியிட்டார். 1974ல் 'மீராபாய்” பஜன்ஸ்', 'சான்வரே ரங் ராச்சி', மற்றும் 'உத் ஜா ரெ காக', 2007ல் “சாத்கி” என்ற ஆல்பத்தையும், 2012 ஆம் ஆண்டு அவருடைய சொந்த பெயரில் (எல்.எம்) ஒரு இசை ஆல்பத்தையும் வெளியிட்டார்.


6 .பல தமிழ் திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.


7. “வாடல்” என்ற மராத்தி மொழித் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். பிறகு, அதே ஆண்டு சி.ராமச்சந்திராவுன் இணைந்து 'ஜஹாஞ்ச்கார்', 'காஞ்சன்' (1955) மற்றும் 'லேகின்' (1990) என்ற இந்தித் திரைப்படத்தையும் தயாரித்தார்.


8. 1999 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.


9. மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையினை புனேவில் நிறுவினார்.


10. இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்தனா விருது” மத்திய அரசால் வழங்கி கெளரவிக்கப்பட்டார். உயிருடன் இருக்கும்போதே பாரத ரத்னா விருது பெற்ற மிகச் சிலரில் லதா மங்கேஷ்கரும் ஒருவர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in