'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை தமன்னா அசைவ உணவு சாப்பிடுவதை விட்டுவிட்டு சைவ உணவுக்கு மாறிவிட்டதாக அறிவித்துள்ளார். அவருடைய 5 வயது செல்ல வளர்ப்புப் பிராணியான பெபள்ஸ் என்ற நாய் உடல்நலம் குன்றியதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இது பற்றி தமன்னா விடுத்துள்ள அறிக்கையில்,
'நான் நன்றாக சாப்பிடுபவள், அதோடு விலங்கை நேசிப்பவளும் கூட. அதனால், அசைவ உணவுப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்பது சவாலாகவே இருந்தது. இருப்பினும், என்னுடைய 'பெபள்ஸ்' பக்கவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றியதால் கடந்த மாதம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.
அவன் ஒரு செல்லப்பிராணி மட்டுமல்ல, குடும்ப உறுப்பினரும் கூட. நான் அவனுடன் நெருங்கியிருந்தேன். அவனுடைய உடல்நலம் குன்றியதைப் பார்த்து, ஒரு விஷயத்தை விட முடிவு செய்தேன். அது ஒரு உணர்வுபூர்வமான தியாகம் என்றாலும், நான் எப்போதோ காய்கறி உணவிற்கு மாறியிருக்க வேண்டும்.
நீங்கள் என்ன உண்கிறீர்கள் என்பதைவிட நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பது முக்கியம்,” என்று தமன்னா கூறியிருக்கிறார்.