இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா பம்பாய் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் படங்களில் நடித்தார். தமிழில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரிய நடிகர்கள் நடித்தது, பெரிய இயக்குனர்கள் இயக்கியது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனீஷா கொய்ராலா சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின்னர் அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். மாப்பிள்ளை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அதில் அவர் வில்லியாக நடித்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மெல்லிய கோடு என்ற படத்தில் நடித்தார்.
தற்போது மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருகிறார். காதலில் விழுந்தேன் படத்திற்கு பிறகு நகுல், சுனைனா நடிக்கும் எரியும் கண்ணாடி என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தில் சுரேஷ் மேனன், அபர்ணா கோபிநாத், ரேவதி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார், சச்சின் தேவ் இயக்குகிறார்.