Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'செக்கச் சிவந்த வானம்' வரவேற்பு எப்படி ?

27 செப், 2018 - 14:04 IST
எழுத்தின் அளவு:
How-is-Chekka-Chivantha-Vaanam-movie?

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹைதரி, டயானா எரப்பா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்து இன்று வெளிவந்துள்ள படம் 'செக்கச் சிவந்த வானம்'. மனிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'காற்று வெளியிடை' படம் தோல்வியடைந்ததால் அவருடைய அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

அடுத்த படம் மல்டி ஸ்டார் படம் என்றதும் அது இன்னும் அதிகமானது. முதல் முறையாக அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் என நாயகர்களும், மற்ற நாயகிகளும் முதல் முறையாக ஒரு படத்தில் நடிப்பதால் இது என்ன மாதிரியான படமாக இருக்கும் எனப் பலரும் ஜோசியம் சொன்னார்கள். இது தொழிலாளர்களைப் பற்றிய கதை, மக்கள் பிரச்சினையைப் பேசும் படம் என்றெல்லாம் அளந்துவிட்டார்கள். ஆனால், படம் வந்தபின் பார்த்தால் பக்கா கேங்ஸ்டர் படமாக இருக்கிறது.

இன்று அதிகாலை காட்சியாக பல தியேட்டர்களில் சிறப்புக் காட்சிகள் நடத்தப்பட்டன. மேலும் இன்று பெரும்பாலான தியேட்டர்களில் இப்படத்தின் இருக்கைகள் 98 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. அடுத்த நான்கு நாட்களுக்கு அதே நிலைமை நீடிப்பதால் படத்திற்கான வரவேற்பு முன்பின் இருந்தாலும் படம் தப்பித்துவிடும் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வியாபார ரீதியாக இந்த 'வானம்' பச்சையாக மாறும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ஆடை விவகாரம் - அதிகம் விமர்சிக்கப்படும் சமந்தாஆடை விவகாரம் - அதிகம் ... நல்ல கதைகளை தேடிச் செல்வேன் : கதிர் நல்ல கதைகளை தேடிச் செல்வேன் : கதிர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

VOICE - CHENNAI,இந்தியா
03 அக், 2018 - 13:46 Report Abuse
VOICE தமிழ்நாட்டில் பிச்சைக்காரன் எல்லாம் ஹீரோ நடிக்கும் படத்தை விட இது எவ்வளவோ மேல். எப்போ பாரு குப்பை மேடு குத்து பாட்டு செவிடன் குருடன் எலும்பு உருக்கி நோய் பிடிச்சவன் குஷ்டரோகி போல தோற்றம் உடைய தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் மகன் போன்றவர்களுக்கு அவர்கள் தோற்றத்துக்கு ஏற்ற கதைகளை சினிமாவாக எடுப்பதால் தமிழ் சினிமா தியேட்டரில் பார்ப்பதே இல்லை. சினிமா துறையில் காமெடியன் கூட அழகு ஆனால் ஹீரோ என்று வரும் பலரின் முகத்தை பார்த்தாலே படு கேவலம். இதில பெரிய கொடுமை பணத்திற்காக கூட எப்படி கதாநாயகிகள் இவர்கள் கூட நடிக்கிறார்களோ தெரியவில்லை. புகழ் பெற்ற நாவல் மூலம் எடுக்கப்படும் ஆங்கிலப்படம் தமிழ் மக்களுக்கு செட் ஆகும் . நாம ஆளுங்க யோசிச்சு 10 வருடம் கழித்து எடுப்பதற்கு பதில் இது போன்ற படங்கள் காபி அடித்தால் கூட தவறு இல்லை. மணிரத்னம் ar ரகுமான் மற்றும் அனைவரது நடிப்பும் சூப்பர்.
Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
30 செப், 2018 - 17:06 Report Abuse
Pugazh V Godfather என்கிற ஆங்கில நாவல்/ திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி யாக இருந்தால் கூடப் பரவாயில்லை, ஆனால் இது கேவலமான காப்பி. உட்கார முடியவில்லை. தொடர்ந்து தோல்வி யாகிற போரிங் படங்களை தந்தாலும் மார்க்கெட்டிங் தெரிந்தவர் என்பதால் ம.ரத்னம் வண்டி ஓடுது.
Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
30 செப், 2018 - 16:32 Report Abuse
Pugazh V தீபாவளி துப்பாக்கி மாதிரி டப்பு டுப பு ன்னு சுட்டு கிட்டே இருக்காங்க..ரத்தம் தியேட்டரில் உக்காந்து இருக்கும் நம்ம மேல தெறிக்கற மாதிரி இருந்தது. குப்பை படம்
Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
30 செப், 2018 - 16:31 Report Abuse
Pugazh V This is copy of a great english movie Gidfather, which is a novel by Mario Puzo. Al pacino had actress as God father. That was a good novel and nice movies. This is poor copy of that. Very boring.
Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
30 செப், 2018 - 16:19 Report Abuse
Pugazh V This is copy of a great english movie Gidfather, which is a novel by Mario Puzo. Al pacino had actress as God father.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  Tamil New Film Ispet rajavum idhaya raniyum
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in