இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஷ்ணு விஷால், அமலா பால் நடித்துள்ள படம் 'ராட்சசன்'. 'முண்டாசுப்பட்டி' படத்தை இயக்கிய ராம் குமார் இயக்கியுள்ள இந்த படம், அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகிறது. ராட்சசன் படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் டில்லி பாபு, இதற்கு முன் தயாரித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு ஒருவழியாக அடுத்த வாரம் திரைக்கு வருகிறது ராட்சசன் படம்.
இந்தப்படத்தை இயக்கும் ராம்குமார், ''முண்டாசுப்பட்டி' படத்துக்கு பிறகு 'ராட்சசன்' கதையை 20 தயாரிப்பாளர்கள், 17 ஹீரோக்களிடம் சொல்லி இருக்கிறேன். ஆனால், யாரும் என்னை நம்பி படம் தயாரிக்கவும், நடிக்கவும் முன் வரவில்லை” என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி வருத்தப்பட்டார்.
''முண்டாசுப்பட்டி' படம் பண்ணும்போதே இயக்குனர் ராமிடம், 'நாம் இன்னொரு படம் பண்ணலாம்' என்று கூறி இருந்தேன். அதற்கு ராம்குமார், 'கொஞ்ச காலம் ஆகும்' என்றார். ஆனால் 4 ஆண்டுகள் ஆகும் என்று எனக்கு அப்போது தெரியாது. பல தடைகளுக்கு பிறகு என்னை தேடி வந்த கதை இது.'' என்றார் விஷ்ணு விஷால்.