டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தனுஷ் நடிக்க சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'வேலையில்லா பட்டதாரி-2' படத்தை தயாரித்த 'கலைப்புலி' எஸ்.தாணு, தற்போது தனுஷை வைத்து 3 படங்களை தயாரிக்க இருக்கிறார்.
3 படங்களில் ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். மற்றொரு படத்தை 'முண்டாசுப்பட்டி' படத்தை இயக்கிய ராம்குமார் இயக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்க இருக்கிறது.
'முண்டாசுப்பட்டி' படத்தை தொடர்ந்து ராம்குமார் இயக்கியுள்ள படம் 'ராட்சசன்'. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்துள்ள இந்த படம் அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ராம்குமார். வட சென்னை வெளியான பிறகு இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது.