துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
'மின்சார கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' ஆகிய படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள படம் 'சர்வம் தாள மயம்'. இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடையும் நிலையில் உள்ளன. விரைவில் இசை மற்றும் டீசர் வெளியீடு நடைபெற உள்ளது.
இந்தப் படத்தை ஜிவி பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் பார்த்துவிட்டாராம். அதோடு ஜிவி பிரகாஷுக்கு இந்தப் படம் பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்று பாராட்டியிருக்கிறார். “சர்வம் தாள மயம்' படத்தைப் பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைதத்து. படத்தை மிகவும் ரசித்தேன். ஒரு இசைப் படத்திற்கான சான்றாக இந்தப் படம் இருக்கும். கண்டிப்பாக பிளாக் பஸ்டர்தான். என் நண்பனுக்கு இப்படி ஒரு படம் கிடைத்ததற்கு மகிழ்ச்சி. உங்கள் வாழ்க்கையின் மிகச் சிறந்த படம், உங்கள் நடிப்பை நேசித்தேன் ஜிவி,” எனப் பாராட்டியிருக்கிறார்.