இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் சர்கார் படத்தின் சிங்கிள் பாடலான சிமிட்டாங்காரன்... நேற்று(செப்.,24) மாலை வெளியிடப்பட்டது. மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஆளப் போறான் தமிழன்... பாடலைப் போன்ற ஒரு பாடலை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த சிம்ட்டாங்காரன்... ஒரு அதிர்ச்சியைத்தான் கொடுத்துள்ளது என்றால் அது மிகையில்லை.
சிம்ட்டாங்காரன் என்றால் என்ன என்பதற்கே இப்பாடலை எழுதிய விவேக் கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன், துடுக்கானவன் என்று அர்த்தம் என்றார். இப்பாடலில் சென்னைத் தமிழ் வார்த்தைகள்தான் அதிகம் இடம் பெற்றுள்ளது. சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்குக் கூட இந்தப் பாடலில் உள்ள பல வார்த்தைகளின் அர்த்தம் புரியுமா என்பது சந்தேகம்தான்.
வித்தியாசமாக எழுதுகிறேன் என பாடலாசிரியர் விவேக் புரியாத பல வார்த்தைகளை வைத்து பெயர் வாங்க முயற்சித்துள்ளார். விவேக் எந்த மொழியில் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் எனத் தெரியவில்லை என கமெண்ட்டுகள் வர ஆரம்பித்துவிட்டன.
சிம்ட்டாங்காரன் என்றால் என்ன என்று சொன்னது போல, விரைவில் இந்த பாடலில் உள்ள மற்ற வார்த்தைகளுக்கு இதுதான் அர்த்தம் என விவேக் விளக்கமளித்தாலும் அளிப்பார்.
ஆனாலும், யு டியூபில் இந்தப் பாடல் அதற்குள் 47 லட்சம் பார்வைகளையும், 4.6 லட்சம் லைக்குகளையும், 38 ஆயிரம் கமெண்ட்டுகளையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.