கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
சர்வதேச அளவில் சாதனை புரிபவர்களுக்கு அங்கீகாரம் தரும் வகையில் ஐஏஆர்ஏ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பின் விருதுதான் தற்போது விஜய்க்காக சர்வதேச விருது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண விருதுதான் என விஜய் ஹேட்டர்ஸ் சமூக வலைத்தளங்களில் ஒரு சர்ச்சையை உருவாக்கி வருகிறார்கள். இந்த அமைப்பின் டுவிட்டர் கணக்கு உறுதி செய்யப்பட்ட ஒன்று அல்ல என்றும், அதை 24 ஆயிரம் பேர் மட்டுமே தொடர்கிறார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட விருதையெல்லாம் சர்வதேச விருது என்று சொன்னால் எப்படி என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். வெளிநாட்டில் டாக்டர் பட்டம் வாங்குவது போலத்தான் இந்த சர்வதேச விருது என்றும் அவர்கள் கிண்டல் செய்கிறார்கள். இந்த விருது வழங்கும் விழா நடக்கும் சமயம் விஜய் அதில் கலந்து கொள்வாரா என்பதைப் பொறுத்தே இந்த விருதை விஜய் எப்படிப் பார்க்கிறார் என்பது புரியும்.