பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்பட பல படங்களில் நடித்தவர் ரம்யா. கன்னட நடிகையான இவர், தொடர்ந்து கன்னட படங்களில் நடித்தபடியே தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியான இந்த ரம்யா, அவ்வப்போது பாஜக அரசு குறித்து தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது, சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்றதை மேற்கோள் காட்டி, கேதர் ஜாதவின் பந்து வீச்சு வேகம் குறைந்துள்ளது. ஆனால் இந்திய ரூபாயின் மதிப்பின் அளவுக்கு குறைந்து விடவில்லை என்று மத்திய அரசை கிண்டல் செய்து ஒரு கருத்து பதிவிட்டுள்ளார்.
ஆனால் ரம்யாவின் இந்த கருத்துக்கு பாஜக சார்பில் எதிர்கருத்துக்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, உங்கள் அறிவுத்திறன் ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியின் செயல் பாட்டை விட குறைவுதான் என்று பதிவிட்டு ரம்யாவை டென்சன் செய்து விட்டு வருகின்றனர்.