ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷங்கர் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 2.0 படத்தின் டீசர் வினாயகர் சதுர்த்தியன்று வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழை விட ஹிந்தி டீசருக்கு இரு மடங்கு வரவேற்பு கிடைத்துள்ளது. டீசரில் இடம் பெற்றிருந்த கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இருந்தாலும் சில மாதங்களுக்கு முன்பு இணையங்களில் லீக் ஆன டீசரையே மீண்டும் வெளியிட்டதாக பல ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள்.
அவரது வருத்தங்களைப் போக்கும் அளவிற்கு 2.0 படத்தின் டிரைலரை தீபாவளி தினத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த டிரைலரில் டீசரில் இடம் பெறாத காட்சிகளும், டீசரை விட மேலும் பிரம்மாண்டமாகவும் பல காட்சிகளை சேர்த்து வெளியிட உள்ளார்களாம்.
தீபாவளி தினத்திற்கு முன்பாகவே படத்தின் அனைத்து கிராபிக்ஸ் வேலைகளும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தின் மிகப் பிரம்மாண்டமான வெளியீடாக இந்தியத் திரையுலகத்தில் 2.0 படத்தின் வெளியீடு இருக்கும் என்கிறார்கள்.