ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் கணவர் ஜெயராம் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான வாணி ஜெயராம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் சுமார் 10,000 பாடல்கள் பாடி உள்ளார். கலைவாணி என்ற இயற்பெயரை கொண்ட வாணி ஜெயராம், திருமணத்திற்கு பிறகு தனது பெயரான வாணியுடன், கணவரின் பெயரை சேர்த்து வாணி ஜெயராம் என மாற்றிக் கொண்டார். பின்னர் அப்பெயர் அவருக்கு நிலையாகி, புகழை தேடி தந்தது.
தமிழகத்தை சேர்ந்த வாணி ஜெயராம், ஜெயராமை திருமணம் செய்து கொண்ட பிறகு மும்பையில் குடியேறினார். பின்னர் தனது பாடும் திறமையை வளர்த்து கொள்வதற்காக மீண்டும் தமிழகத்திற்கு வந்தார்.