இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
பொக்கிஷம் படத்தின் மூலம் அறிமுகமான பிந்து மாதவி கழுகு படத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தார். அதன் பிறகு தேசிங்குராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சவாலே சமாளி, பசங்க 2, ஜாக்சன் துரை, பக்கா படங்களில் நடித்தார். என்றாலும் கழுகுக்கு பிறகு அவருக்கு பெயர் சொல்லும்படியாக ஒரு படம் அமையவில்லை. தற்போது கழுகு 2ம் பாகத்தில் நடித்து வருகிறார்.
பொதுவாக நடிகைகள் எடை கூடிவிடக்கூடாதே என்பதிலேயே கவனமாக இருப்பார்கள். ஆனால் பிந்து மாதவி கதை வேறு எடை கூட வேண்டும் என்ற கவலையில் இருப்பார். எல்லா படங்களிலுமே ஒல்லியாக ஒருவித சோக முகத்துடனேயே இருப்பார். இதை மாற்றுங்கள் மேடம் கொஞ்சம் சதைபோடுங்க என்றுதான் எல்லா இயக்குனர்களும் அவரிடம் சொல்வார்கள்.
இப்போது பிந்து மாதவி 8 கிலோ வரை எடை கூடி பூசி மெழுகின மாதிரி இருக்கிறார். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரின் புதிய தோற்றத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். கழுகு 2ம் பாகத்துக்கு பிறகு ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்கிற எண்ணத்தில் இருக்கிறார் பிந்து மாதவி.