தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை நயன்தாரா மாயா என்ற படத்தில் பேயாக நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர் சோலோ ஹீரோயினாக நடிக்க ஆர்வம் காட்டினார். அதன் பிறகு அவர் நடித்த அறம் வெற்றி பெற்றது. டோரா ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. கோமாவு கோகிலாவும் வெற்றி பெற்றது.
நயன்தாரா போன்று சோலோவாக நடித்து வெற்றி பெற வேண்டும் என்பது த்ரிஷாவின் ஆசை. இதற்காக நாயகி என்ற படத்தில் நடித்தார். இதில் 1980களில் வாழ்ந்த நடிகையாகவும், தற்போதைய மார்டன் பெண்ணாகவும் நடித்தார். தமிழ், தெலுங்கில் தயாரான இந்தப் படம் பெரிய தோல்வி அடைந்தது. அதன் பிறகு மோகினி படத்தில் நடித்தார். அதுவும் வெற்றி பெறவில்லை. தற்போது கர்ஜனை, 1818 என்ற படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார்.
இதுதவிர அவர் நடிக்கும் மற்றொரு சோலோ ஹீரோயின் படமான பரமபத விளையாட்டு படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் த்ரிஷா பேயாக நடிக்கிறார். இதன் பர்ஸ்ட்லுக் நயன்தாரா நடித்த மாயா படத்தின் பர்ஸ்ட்லுக் போன்றே அமைந்திருக்கிறது. மாயா போன்று பரமபத விளைட்டு வெற்றி பெறுமா? சோலோ ஹீரோயினாக த்ரிஷா வெற்றி பெறுவாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும்.