மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
அக்டோபர் 4-ஆம் தேதி விஜய்சேதுபதி நடித்துள்ள '96' படமும் 5-ஆம் தேதி தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்துள்ள 'ஆண் தேவதை', விவேக் நடித்துள்ள 'எழுமின்' ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.
இந்நிலையில் இருமுகன்' படத்தை தொடர்ந்து ஆனந்த் சங்கர் இயக்கும் நோட்டா (NOTA) படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'அர்ஜுன் ரெட்டி' தெலுங்கு படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் இது. 'ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் இது என்பதால் இப்போதே தியேட்டர்களை பிளாக் பண்ண தொடங்கிவிட்டனர்.
எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் அக்டோபர் 5-ஆம் தேதி நோட்டா படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்தது மட்டுமல்ல, தங்களுடைய படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காத அளவுக்கு பிளாக் பண்ணப்படுவதை கண்டு மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விஷயத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் புழுங்குகின்றனர்.