தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தான் இயக்குனராக அறிமுகமாகும் லூசிபர் படத்தை மிக பிரமாண்டமாக எடுத்து வருகிறார் நடிகர் பிருத்விராஜ். இந்தப்படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்க முக்கிய வேடங்களில் விவேக் ஓபராய், இந்திரஜித், டொவினோ தாமஸ் ஆகியோர் நடிக்கின்றனர். மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கின்றார். அரசியல் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தில் ஆயிரக்கணக்கில் துணை நடிகர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். 70 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவாம்.
கடந்த சில நாட்களாக அரசியல் கட்சி கூட்டம் ஒன்றை படமாக்கியுள்ளார் பிருத்விராஜ். இதில் குறைந்த பட்சம் 1000 துணை நடிகர்களாவது பங்கு பெற்றுள்ளனராம். அதேசமயம் சில காட்சிகளில் துணை நடிகர்களின் எண்ணிக்கை 5000 வரை செல்கிறதாம். துணை நடிகர்களின் சம்பளமாகவே இதுவரை சுமார் 2.5 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாக இந்தப்படத்தில் நடிக்கும் ஒரு குணச்சித்திர நடிகர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.