இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாளத்தில் பிரியதர்ஷன் - மோகன்லால் கூட்டணியில் மிக பிரமாண்டமாக உருவாக இருக்கும் படம் மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம். கடற்போர் வீரனாக வாழ்ந்து மறைந்த குஞ்சாலி மரைக்கார் என்பவரது வரலாறாக உருவாகும் இந்தப்படத்தில், பிரபு, அர்ஜூன், சுனில் ஷெட்டி என மற்ற மொழிகளில் இருந்தும் முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். மோகன்லாலின் மகன் பிரணவ்வும் இளம் வயது குஞ்சாலி மரைக்காராக நடிக்கவுள்ளார்.
இந்தநிலையில், இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. கீர்த்தி சுரேஷை தங்களது கீதாஞ்சலி படம் மூலமாக மலையாளத்தில் அறிமுகப்படுத்தியது பிரியதர்ஷன் - மோகன்லால் ஆகிய இருவரும் தான்.
அதன்பின் கடந்த ஐந்து வருடங்களாக மலையாள திரையுலகம் பக்கமே போகாத கீர்த்தி சுரேஷ், தனது குருநாதர் படம் என்பதால் மட்டுமே இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.