ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
நியூயார்க்: பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகள் கடத்தப்படுவதை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட, லவ் சோனியா. தப்ரேஸ் நூரானி இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், ராஜ்குமார் ரவ், ரிச்சா சத்தா, அனுபம் கெர், பரிட்டா பின்டோ, முருனல் தக்குர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நைல்ஸ், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளனர். இப்படம், அடுத்த மாதம், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள, ஐ.நா., அலுவலகத்தில் திரையிடப்படுகிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் தப்ரேஸ் நுாரானி கூறியதாவது : ஐ.நா.வில் திரையிடப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. வாங்கிய கடனை அடைப்பதற்காக, தந்தையால் விற்கப்பட்ட இந்திய கிராமத்து இளம் பெண், பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதை மையமாக வைத்து, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.