டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
துணிச்சலான கேரக்டரில் நடிக்கும் வல்லமை கொண்டவர் நடிகை வித்யாபாலன். அதற்கு உதாரணம் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தி டர்ட்டி பிக்சர்ஸ். ஆரம்பத்தில் இந்த கேரக்டரில் நடிக்க அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தும் துணிச்சலாக நடித்து வெற்றி பெற்றார். படமும் நன்றாக ஓடி வசூலை வாரி குவித்தது. மேலும் இப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைக்க இருக்கிறது. டர்ட்டி பிக்சர்ஸ் படத்திற்கு அடுத்து வித்யாபாலன் நடித்த கஹானி படமும் அவருக்கு பெரும் பாராட்டை பெற்று தந்தது. நிறைமாத கர்ப்பிணியாக தனது கணவரை தேடி இந்தியா வரும் வித்யாபாலன், எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தனது கணவரை கண்டுபிடிக்கிறார் என்பது கதை.
இப்படி தொடர்ச்சியாக சவாலான வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்து வரும் வித்யாபாலனை, அனுஷ்காவுக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டதாம். சமீபத்தில் அவரின் கஹானி படத்தை பார்த்து வியந்து போன அனுஷ்கா, இப்படத்தை யாராவது தமிழிலோ அல்லது தெலுங்கிலோ ரீ-மேக் செய்தால் அந்த கேரக்டரில் நானே நடிக்கிறேன் என்று தானாக முன்வந்து விருப்பம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தி டர்ட்டி பிக்சர்ஸ் தமிழ், தெலுங்கு ரீ-மேக்கில் அனுஷ்கா நடிக்க இருப்பதாக ஒரு பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது.