ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'கண்ணடித்து' இந்தியா முழுவதிலும் திடீரென பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தவர் பிரியா வாரியர். 'ஒரு அடார் லவ்' படத்தில் இடம் பெற்ற அந்த 'கண் சிமிட்டல்' காட்சி வைரலாகப் பரவியது. இப்போது அந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 'பிரிக் பெண்ணே' என்ற ஒரு பாடலை யு டியூபில் வெளியிட்டுள்ளனர்.
நேற்று வெளியான அந்தப் பாடல் தற்போது வரை 22 லட்சம் பார்வைகளைக் கடந்தாலும் 2 லட்சத்து 87 ஆயிரம் டிஸ்லைக்குகளைப் பெற்று அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. பாடலுக்கு லைக் கொடுத்துள்ளவர்கள் வெறும் 38 ஆயிரம் பேர் தான். லைக்குகளை விட சுமார் பத்து மடங்கிற்கு டிஸ்லைக்குகள் அதிகமாக இருப்பது ஆச்சரியமான ஒன்று.
ஒரு ஆல்பம் போல பாடலைப் படமாக்கியருந்தாலும் ஏன் இவ்வளவு டிஸ்லைக்குகள் என்பது புரியாத புதிர் தான்.